Sunday, December 23, 2007

சுப.வ.அழ குடும்பத்தின‌ர் (Alamu's family)

அன்று-எங்கள் இல்லத்தை
குதூகலமாக்கியவன் வெள்ளையப்பன்,
இன்று ??? யாக்கியவன்.


மாப்பிள்ளை வந்த நேரம்
நல்ல நேரம் என்றெண்ணின‌ர் எம்மில்லத்தோர்
ஆம் - எண்ணியது நிறைவேறியது
ஏற்றத்துடன் இருந்தோம்
இரண்டரை ஆண்டுகள்,
இடையூறின்றி
இருந்தோம் மகிழ்ச்சியாய்
எல்லையற்ற மகிழ்ச்சியாய் – எங்கள்
செவிக்கு செய்தி வரும்வரை.


இன்று அனைத்தும்
கொள்ளையுண்டான் எங்கள் வெள்ளையன்
உன் பேச்சினால், நற்குணத்தினால்
மட்டும் நீ எங்கள் இதயத்தை
கொள்ளை கொண்டதில்லாமல்
மகிழ்ச்சி சுகங்களெல்லாம்
கொள்ளை கொண்டாய்...


மாப்பிள்ளையாய் வழியனுப்பினோம் - மழலையென்னும்
வெற்றிவாகையுடன் வருவாயென - ஆம்
மாப்பிள்ளையாய் வழியனுப்பினோம்
மைத்துனர்களின் மனம் காண வருவாயென
பார்க்கவில்லை நாங்கள் - அறவே
எதிர்பார்க்கவில்லை
நீ - கொள்ளையுண்ட அனைத்துள்ளங்களின்
உதவியோடு மதுரைநகர் வருவாயென…


"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
ஆம் - உண்மையாக்கினாய் நம் வள்ளுவனின் குறளை


உன் நினைவில் வாடும்
சுப.வ.அழ குடும்பத்தின‌ர்

No comments: